Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

திருவண்ணாமலையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் பள்ளி குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் அந்தந்த பள்ளிக ளிலேயே உள்ள ஆசிரியர்கள் மூலமாக வருவாய்த்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டபேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் முன்னிலையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சியில் கிளியாப்பட்டு, களஸ்தம்பாடி, சானானந்தல், வள்ளிவாகை, குன்னியந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் ராஜா ராணி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இம்முகாமில் தமிழ்நாடு சட் டப்பேரவை துணைத்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எண் ணற்ற நலத்திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி முதற்கட்டமாக நகராட்சிகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதால், கிராமப்புற மக்களின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று, இத்திட் டத்தினை கிராமப்புறங்களில் தொடங்கி வைத்தார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் கள் நடைபெற்றது. இம் முகாம் களில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு உரிய பதிலளிக்க துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மனுக்களை அளித்து ஒப்புகை பெற்றுக்கொண்டால் ஒரு மாதத்திற்குள் அதற்கான தீர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அந்த துறை அதி காரிகள் நடவடிக்கைகளை செய்து தருவார்கள்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. எனவே இம்முகாமில் பங்கு பெற்று மனுக்களை அளித்து பிரச்சனைகளை தீர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இச்சிறப்பு திட்ட முகாமில் மகளிர் திட்டம் சார்பாக கிளி யாப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பாசமலர் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், மகிழ்ச்சி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1 லட்சம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், களஸ்தாம் பாடி ஊராட்சியில் உள்ள ஆப்பிள் மற்றும் தங்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் வருவாய்த்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மற்றும் 1 பயனாளிக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் வழங்கினார்.

இதன்தொடர்ச்சியாக திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள ஸ்ரீ விஜய் பாலாஜி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து முகாமில் மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார் பில் 1 பயனாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம், 8 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாம்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங் கள் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருவண் ணாமலை மாவட்டத்தில் மக்களு டன் முதல்வர் முகாமானது 20,000 மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் நாள்தோறும் ஐந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது.

15 துறைகளின் கீழாக 44 சேவைகள் வழங்க மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அனைத்து மனுக்களும் பதிவு செய்யப்பட்டு, மக்களுடன் முதல்வர் முகாமில் இ-சேவை மையத்தில் பதிவு செய்யப்படும் மனுக்களுக்கான கட்டணம் சேவை கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் பெறப்படும். இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

பள்ளி குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படை யில் பள்ளி குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் அந்தந்த பள்ளி களிலேயே உள்ள ஆசிரியர்கள் மூலமாக வருவாய்த்துறை அலுவலர்களால் பதிவு செய் யப்படுகிறது. எனவே இந்த முகா மில் அனைவரும் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும்.

முகாம்களில் பணியாற்றக் கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மனு அளிக்க வரும் பொதுமக்களை நல்ல முறையில் அணுகி அவர்களுக்கு உரிய பதில்களை வழங்குவதுடன் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் பொதுமக்கள் மனு அளித்தமைக்கான ஒப்புகை சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் திருவண்ணாமலை சமூக நல வட்டாட்சியர் பரிமளா, துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத்தலைவர் தமயேந்தி ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img