fbpx
Homeபிற செய்திகள்கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் விளையாட்டு பயிற்சி முகாம்

கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் விளையாட்டு பயிற்சி முகாம்

கரூர் பரணி பார்க் கல்வி வளா கத்தில் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 24 வரை பரணி மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தடகளம், ஜூடோ, ஏரோபிக்ஸ், கைப்பந்து, சதுரங்கம், கேரம், கால்பந்து, கூடைப்பந்து, கராத்தே, யோகாசனா, சிலம்பம் ஆகிய விளையாட்டுக்களில் 600 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இம்முகாமின் நிறைவு விழா விற்கு பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங் காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.
பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், “மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், குழு உணர்வை வளர்க்கும் வகையிலும், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்தி லும் ஒவ்வொரு ஆண்டும் விளை யாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் இம்முகாமில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மாணவர்களின் உடல் நலன் பேணும் வகையில் சத்தான சூப் மற்றும் பயிறு வகைகள் பள்ளியின் சார்பில் அன்றாடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, உடற்கல்வித்துறை கங் காதரன், சந்திரமோகன் மற் றும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர் கள் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img