Homeபிற செய்திகள்சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமியின் 8ம் ஆண்டு விழா

சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமியின் 8ம் ஆண்டு விழா

கோவை பீளமேடு அருகே உள்ள மணி மஹால் வளாகத்தில் சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமியின் 8ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 35 போட்டியாளர்கள் டைம் ட்ரைல், ரேஸ் ஆகியவற்றில் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோல்ட், சில்வர், பிராஞ் மெடல்களையும், பங்கேற்பு சான்றிதழ்களையும் அகாடமியின் செயலாளர் ரகுபதி வழங்கினார்.

இதில் முதன்மை பயிற்சியாளர் அபிநயா ரகுபதி பேசுகையில்,

“பெற்றோர்களின் அர்ப்பணிப்பில் தான் பிள்ளைகள் விளையாட்டு துறையில் முன்னேற முடியும். நான் சர்வதேச அளவில் போட்டியாளராக உருவெடுத்ததற்கு காரணம் எனது பெற்றோர் மற்றும் சகோதரர். ஆகவே இங்கு பயிற்சிக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இன்று சாதாரணமாக தோன்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு நாளை அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் ஒரு நாள் உயர்ந்த லட்சியத்தை அடைவார்கள்” என்றார்.

நிகழ்வின் இறுதியில் செயலாளர் ரகுபதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img