fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே வனத்தில் தனியாகத் தவிக்கும் குட்டி யானை - தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர்

மேட்டுப்பாளையம் அருகே வனத்தில் தனியாகத் தவிக்கும் குட்டி யானை – தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை வனச் சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் வனப்பகுதியில், பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குட்டி யானை ஒன்று தாய் யானையிடம் இருந்து பிரிந்து வனப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிங்காபுரம் – காந்தையூர் செல்லும் சாலையின் ஓரங்களில் அலைந்து திரியும் இந்த குட்டி யானை, தாயை தேடி தவிப்புடன் சுற்றித் திரிவதோடு, அருகிலுள்ள மக்களிடம் பயமின்றி சென்று விளையாட முயற்சிப்பதும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் அதைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர்.

இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டி யானையை அதன் தாய் யானையுடன் மீண்டும் சேர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யானைக் கூட்டம் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாய் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து குட்டியை பாதுகாப்பாக சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img