fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் முகாம்

கோவையில் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் முகாம்

கோயம்புத்தூர் மாவட்டம் காட்டம்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்டம் முகாம் நடைபெற்றது.

இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை, மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் விண்ணப்பம், கே.சி.சி. கறவை மாட்டு கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இம்முகாமில் பொள்ளாச்சி சரக துணை பதிவாளர் சுவேதா, காட்டம்பட்டி புதூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிரிகதிர்வேல், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விமல்ராஜ், கிணத்துக்கடவு சரக கூட்டுறவு சார் பதிவாளர் சத்யா, சங்க செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இம்முகாமில் காட்டம்பட்டி, பெரியகளந்தை, மெட்டுபாவி கிராமத்தை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img