fbpx
Homeபிற செய்திகள்உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களின் செயல்பா டுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில், மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் குன்னூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச் சர், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட் டின் வளர்ச்சிக்காக பல் வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை திறம்பட செயல் படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறார்கள்.

அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, புதுமைப் பெண், முதல மைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு, அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக் கூடிய
பொதுமக்களுக்கும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு, தமிழ்நாடு முதல மைச்சர், தமிழ்நாட்டினை இந்தியாலிலேயே முன் னணி மாநிலமாக தலைநி மிரச் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி, விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், “உங் களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்டத்தின் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட் சித்தலைவர் தலைமையில் நடைபெறும். அதன்படி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சடையன்கோம்பை, சின்னலகோம்பை மற்றும் ஆனைப்பள்ளம் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை வனப்பகுதி வழியாக மாவட்ட ஆட் சித்தலைவர் நடந்து சென்று, அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அப்ப குதிகளிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இறுதியாக குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை யில், அனைத்துத்துறை அலு வலர்களுடன் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ளும்போது, நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வன அலுவலர் (உதகை) கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மகளிர் திட்ட இயக்குநர் காசி நாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பாலுசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ)) ராஜா, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கல்பனா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img