fbpx
Homeபிற செய்திகள்கரூரில் தென் மண்டல சி.பி.எஸ்.இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகள்

கரூரில் தென் மண்டல சி.பி.எஸ்.இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகள்

இந்திய அரசின் மத்திய பள்ளிகள் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) சார்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 138 பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி நேற்று (11ம் தேதி) தொடங்கியது. நாளை வரை மூன்று நாட்கள் கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் ‘நாக் அவுட் மற்றும் டபுள் ரெபிசார்ஜ்’ முறையில் நடைபெறுகிறது.

தொடக்க விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தனர்.
கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகேசன், கரூர் மாவட்டக் கல்வி (இடைநிலை) அலுவலர் ரவிச்சந்தர், கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண் & பெண் இரு பாலரும் சேர்த்து மொத்தம் 63 எடை பிரிவுகளில் நடைபெறும். இப்போட்டி களில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வெல்லும் வீரர்கள் செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய சி.பி.எஸ்.இ ஜூடோ போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

மேலும் ஒவ்வொரு பள்ளியும் வெல்லும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை கள் வெற்றி பெறும் பள்ளி களுக்கு வழங்கப்படும்.
ஒட்டுமொத்த தென் மண்டல சாம்பியன்ஷிப் கோப்பையை கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் பரணி வித்யாலயா பள்ளி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி ஏற்பாடுகளை பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும் தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவருமான முனைவர் ராமசுப்பிரமணியன் தலை மையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
பரிசளிப்பு விழா, 19 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img