ஈரோட்டில் உள்ள TNGEA அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
இதில் சமூக நலத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.துரைசிங் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில், தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்களை நேரடியாக அந்த பதவிக்கு நியமிப்பதற்கு பதிலாக பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும், இடமாற்றங்களை கவுன்சிலிங் முறையில் செய்ய வேண்டும், இந்த ஆண்டுக்குள் துறையில் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட வேண்டும், வட்டார மற்றும் மாவட்ட அளவில் இளநிலை நிர்வாக அதிகாரிகள் பதவிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பதவிகள் உருவாக்க வேண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் ஊழியர்களுக்கு கிரேடு 1 மற்றும் 2 கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிடட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கண்ணன், ரவி, சக்தி வினோத்குமார், வெற்றிவேல், மலர்விழி, தினகரன், நாராயணசாமி, குருசக்திவேல் மற்றும் காந்திமதி ஆகியோர் பேசினர்.



