fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் எக்ஸ்ட்ரீம்’நீர் கசிவைத் தடுக்கும் பெயிண்ட் அறிமுகம்

‘ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் எக்ஸ்ட்ரீம்’நீர் கசிவைத் தடுக்கும் பெயிண்ட் அறிமுகம்

கட்டிடங்களின் உட்புற சுவர்களில் தண்ணீர் கசிவு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏசியன் பெயிண்ட்ஸ் ‘ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் எக்ஸ்ட்ரீம்’ என்னும் புதிய பெயிண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

புதிய பெயிண்ட்டின் விளம்பர தூதர்களாக ரன்பீர் கபூர், பிவி சிந்து ஆகியோர் உள்ளனர். நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வானிலையை கருத்தில் கொண்டு, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஈரப்பதம் உள்ளிட்ட நீர் கசிவு பிரச்சினைகளுக்கு பயனுள்ள தீர்வை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் புதிய ‘ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் எக்ஸ்ட்ரீம்’ பெயிண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கும் இடங்களில் அதை உடைத்து பூசிய பிறகு பெயிண்ட் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பெயிண்ட்டை அந்த இடங்களில் மேலோட்டமாக அடித்தாலே போதுமானதாகும்.

இதன் எளிதான பயன்பாடு மற்றும் சிறந்த செயல்திறன் கட்டிடத்திற்கு உறுதியை அளிக்கிறது. இதை 90 சதவீத ஈரப்பதம் உள்ள சுவர்க ளிலும் அடிக்கலாம். இதற்கு 5 ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவ னம் வழங்குகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் கூறுகையில், கட்டிடங்களில் நீர் கசிவு பிரச்சினை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்ட நாங்கள், அந்த பகுதிகளை உடைக்காமல் நீர் கசிவு பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டோம்.

அதன் காரணமாக தற்போது புதிய ‘ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் எக்ஸ்ட்ரீம்’ பெயிண்ட்டை அறிமுகம் செய்துள்ளோம். இந்த பெயிண்ட்டை எந்தவித சிரமும் இன்றி எளிதாக பயன்படுத்தலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img