fbpx
Homeபிற செய்திகள்பாறுக் கழுகுகள் தினம்- முதுமலை, சத்தி புலிகள் சரணாலயங்களில் கடைப்பிடிப்பு

பாறுக் கழுகுகள் தினம்- முதுமலை, சத்தி புலிகள் சரணாலயங்களில் கடைப்பிடிப்பு

பாறுக் கழுகுகளுக்கான பன்னாட்டு நாள் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்களில் கடை பிடிக்கப்பட்டது. அதை முன் னிட்டு பல்வேறு நிகழ்ச் சிகளை வனத்துறையுடன் இணைந்து அருளகம் அமைப்பு ஒருங் கிணைத்தது. உலகளாவிய இயற்கைப் பாதுகாப்பு அமைப் பும் இணைந்து பங்குபெற்றது.

முன்னதாக கால்நடை மருத்துவர்கள், மாணவர்கள், மருந்து விற்பனையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஊர்வலம் மசினகுடியில் நடத்தப்பட்டது. ‘காப்போம் காப்போம்’ ‘கழுகுகளைக் காப்போம்’ என்றும் ‘தவிர்ப் போம் தவிர்ப்போம்’ ‘தடை செய்யப்பட்ட மருந்துகளைத் தவிர்ப்போம்’ என்றும் ‘பாறுக் கழுகு செழித்தால் பாரும் செழிக்கும்’ என்ற முழக்கங்களை எழுப்பியபடியும் பதாகையை ஏந்தியபடியும் பேரணியில் வலம் வந்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் மசினகுடியில் அமைந்துள்ள குரும்பர்பாடியில் அருளகத்தின் கலைக்குழுவினரால் பாடல் மூலமும் நாடகம் மூலமும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அத்துடன் பாறுக் கழுகப் பாதுகாப்பிற்காக நடிகர் வடிவேல் பேசினால் எப்படி இருக்கும் என்றும் நடித்துக் காட்டப்பட்டது.அதை மாணவ ர்களும் பொது மக்களும் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கால்நடை மருத் துவர்களையும் மருந்து விற்ப னையாளர்களையும் பாறுக் கழுகுகளின் வாழ்விடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். செல்லும் வழியில் அவர்கள் வானத்தில் பறந்த பாறுக் கழுகை முதன்முறையாகத் தொலை நோக்கியில் பார்த்து மகிழ்ந்தனர்.

பரம பதம் போன்று பாறு பதம் ஒன்று உருவாக்கி அதில் கால்நடை மருத்துவர்களும் மாணவர்களும் விளையாடினர். இதன் மூலம் பாறுக் கழுகுகள் எதனால் அழிகிறது என்ன செய்தால் அவை மேம்படும் என்ற எளியவைகயில் புரிய வைக்கப்பட்டது. நிகழ்ச் சியில் வென்றவர்களுக்கு கூடலூரிலுள்ள சிவா மருந் தகம் சார்பாகப் பரிசு வழங் கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன், நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் கூட்டு முயற்சியால் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை பெருகும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். அத் துடன் அண்மையில் ஒன்றிய அரசால் அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகள் தடைசெய்யப்பட்டதை வரவேற்றதோடு தமிழ்நாடு அரசு முன்னோடியாகக் கீட்« டாபுரோபேன், புளுநிக்சின் ஆகிய மருந்துகளைத் தடை செய்ததையும் நன்றியுடன் குறிப் பிட்டார்.

நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை முதுமலைப் புலிகள் காப்பகக் கள இயக் குநர், துணை இயக்குநர் ஆகியோரின் வழிகாட்டுதலில் திரு தயானந்தன், வனச்சரகர், சீகூர் சரகம் ஏற்பாடு செய் திருந்தார். நிகழ்ச்சியில் திரு. பாலாஜி, மசினகுடி சரகர், திரு ஜான்பீட்டர்ராஜ், சிங் காரா சரகம், திரு சதாம், தெப்பக்காடு சரகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாயாற்றில் அமைக்கப்பட்ட வர வேற்புப்பலகையை கோபால கிருக்ஷ்ணன் (கூடுதல் இயக் குநர், மின்வாரியம்) திறந்து வைத்தார். தெப்பக்காட்டில் ‘நான் தான் பாறுக்கழுகு பேசு கிறேன்’ என்றத் தலைப்பில் 9 மொழிகளில் அருளகம் சார்பாக உருவாக்கப்பட்ட ஒலிப் பேழையை வித்யா (துணை இயக்குநர், முதுமலைப் புலிகள் காப்பகம்) திறந்து வைத்தார்.

அசிக்குளோபினாக் கீட்டோபுரோபேன் தடை செய்யப்பட்டதற்கான அரசிதழ் நகல் அச்சடித்து கால்நடை மருத்துவர்களுக்கும் மருந்து விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக கழுகுகளுக்கு கேடு விளைவிக்கும் டைக்குளோ பினாக், கீட்டோபுரோபேன், அசிக்குளோபினாக், நிமு சிலாய்ட்சு, புளூநிக்சின் ஆகிய மருந்துகளைப் பயன் படுத்தமாட்டோம் பரிந் துரைக்கவும் மாட்டோம் எனக் கால்நடை மருத்துவர்களும் விற்க மாட்டோம் என மருந்து விற்பனையாளர்களும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

WWF அமைப்பிலிருந்து பிரடிக்ட் அவர்களும் அருளகம் அமைப்பிலிருந்து இரா.கார்த் திகேயன், க. பிரபு, ச.சூர்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

நேற்று மாயாறு கிராமத்தில் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் எட்டு குழுக்கள் கலந்து கொண்டன. ஒவ்வொரு குழுவினரும் விலங்குகளின் பெயர்களைத் தாங்கி விளையாடினர். அதில் வாழைத்தோட்டத்திலிருந்து பாறு வல்சர் என்ற பெயரைத் தாங்கிய குழு கலந்து கொண்டது.

இக் குழுவினற்கு, பாறு கழுகு பொறித்த விழிப்புணர்வுச் சீருடையை அருளகம் வழங்கிச் சிறப்பித்தது. பாறுக் கழுகு விழிப்புணர்வு நாள் சுஜில் குட்டைக் கிராமத்திலுள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

பள்ளித் தலைமை யாசிரியை க.தேவிகா முன் னிலை வகித்தார். பாறுக் கழுகுகள் ஆற்றிவரும் நன்மை குறித்தும் அவற்றைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்று சந்திரசேகர் உரையாற்றினார். உலக இயற்கைக் காப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கிருஸ் ணக்குமார் தொடக்கவுரை ஆற்றினார்.

பாறுக்கழுகு நாள் கொண்டாடப்படவேண்டியத் தேவை ஏன் வந்தது என அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஊர்வலம் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு பாறுக் கழுகின் முக்கியத்துவம் குறித்துப் பாடல் வாயிலாகவும் நாடகம் வாயிலாகவும் திரு . செந்தில், கடலரசன், பொன்ராஜ் ஆகி யோர் நடித்துக்காட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img