fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்கள் மேம்பாட்டு திட்டம்

சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்கள் மேம்பாட்டு திட்டம்

சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில், ‘உயர் கல்வி: கற்பித்தலில் இருந்து சுதந்திரமான மாணவர்களின் சுய கற்றலுக்கு ஒரு பயணம்’ என்னும் தலைப்பில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கில ஆராய்ச்சித் துறை பேராசிரியர் டாக்டர் ஜே. ஜான் சேகர், உயர்கல்வியின் முக்கியத்துவம், தற்போதைய உலகச் சூழல் மற்றும் இந்தியாவில் கற்பித்தல் தொடர்பாக உள்ள நிலை ஆகியவை குறித்து பேசினார்.

வகுப்பறை சார்ந்த ஆராய்ச்சி, ஆராய்ச்சி அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்பித்தல் முறை குறித்தும் பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

இதில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img