சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில், ‘ஸ்லோவாக்கியாவில் உள்ள கோசிஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்னும் தலைப்பில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச் சியும் இக்கல்லூரி சார்பில் நடைபெற்றது.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
கோசிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதார பாடப்பிரிவு டீன் மைக்கல் சோல்ட்ஸ், துணை டீன் ஜான் புலேகா, இயந்திர பொறியியல் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பப் பிரிவு துணை டீன் ஜான் க்ரால் ஆகியோர் உரையாற்றினர்.
ஒரு பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சிக்காக எவ்வாறு அனைத்து தரப்பினராலும் அறியப்படுகிறது என்பது குறித்தும், மாணவர்கள், ஊழியர்கள், நிதி பயன்பாடு, ஊடக கவனத்தை ஈர்ப்பது மற்றும் சமூகத்திற்கான உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் பேசினர்.
சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தனர்.