இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசையை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு என்னும் என்ஐஆர்எப் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான தரவரிசையில் விண்ணப்பித்த ஒன்பது பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஓர் இடத்தை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (சிமாட்ஸ்) பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போதைய தரவரிசையில் இந்த சாதனையை பெற்ற ஒரே கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.
பல் மருத்துவத்தைப் பொறுத்தவரை இப்பல்கலைக் கழகம் முதலிடமும் பிற பிரிவுகளில் பல்வேறு இடங்களையும் பிடித்துள்ளது. சட்டப்பிரிவைப் பொறுத்தவரை 11வது இடத்திலும், பல்கலைக்கழக வரிசையில் 13 இடத்தையும், மருத்துவ பிரிவில் 18வது இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவில் 27-வது இடத் தையும், ஆராய்ச்சி பிரிவில் 36-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 64-வது இடத்தையும், நிர்வாகப் பிரிவில் 71-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் 51-100 பாயிண்ட் பெற்றிருக்கிறது.
பல் மருத்துவத்தைப் பொறுத்தவரை உலக அள வில் முதல் 20 கல்வி நிறுவனங்களில் சிமாட்ஸ் இடம் பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரமானது இப்பல் கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இது குறித்து இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் கூறுகையில், இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உயர்ந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சியில் எங்களின் எல்லைகளை தாண்டி சிறப்பாக செயல்படுவோம் என்றார்.



