டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூரும் வகையில் விருந்தினர் விரிவுரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் விரிவுரை நடை பெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.யு.பிரபா தனது சிறப்புரையில், இன்றைய உலகில் சுற்றுச்சூழல் பாது காப்பின் அவசரத் தேவையை வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர், விக்னேஷ்குமார், பயிர்கள்(PAYIRGAL-ன் நிறுவனர் மற்றும் தலைவர், தொழில்முனைவோர் வழிகாட்டி மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில் வழிகாட்டுதல் பயிற்சியாளர், துணைத் தலைவர் பிராண்ட் குடியரசு (தமிழக மண்டலம்) இந்திய தூதர் மில்லட் பாக்ஸ், பேசும்போது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனி நபர் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள மாணவர்கள் முன்முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.