சென்னையில் சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தைபே பொருளாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் ரிச்சர்ட் சி.எல் சென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஐதராபாத் சிஎஸ்ஐஆர் இயக்குனர் வினய் கே நந்திகூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்பலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் என்.எம். வீரையன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், பொறியியல், சட்டம், மேலாண்மை, பிசியோதெரபி, தொழில் சிகிச்சை, சுகாதார அறிவியல், உடற்கல்வி, லிபரல் ஆர்ட்ஸ் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலர் பத்மஸ்ரீ பேராசிரியர் பாப்ராம் பார்கவா, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை செயலாளர் டாக்டர். சேகர் சி. மாண்டே, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோருக்கு கவுரவ விருது வழங்கியது.