நடைபெறவுள்ள நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் வழங்கினார்.
உடன் மேற்பார்வையாளர்கள் நிர்மலா, சிவசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.