
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோவை மண்டல அலுவலகம் சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ரேஸ் கோர்ஸ் சாலையில் பேரணி நடந்தது. கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் கோவை பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா முன்னிலையில் நடந்த இந்த பேரணியில் வங்கியின் அதிகாரிகள், ஊழியர்கள் விஜிலென்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.



