fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் சிவாயம் சில்க்ஸ் சுபமுகூர்த்த பட்டு மாளிகை திறப்பு

சேலத்தில் சிவாயம் சில்க்ஸ் சுபமுகூர்த்த பட்டு மாளிகை திறப்பு

சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் சிவாயம் சில்க்ஸ் சுபமுகூர்த்தப்பட்டு மாளிகை திறப்பு விழா நடந்தது. திரைப்பட நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற் பனையை துவக்கி வைத்தார்.

இது குறித்து சிவாயம் சில்க்ஸ் உரிமையாளர் சந்தோஷ் கூறியதாவது:
சிவாயம் சில்க்ஸில் ரூ.500 முதல் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து ரகப்பட்டுப் புடவைகளும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க செய்வதே எங்களது நோக்கம்.

திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு பட் டுப் புடவைக்கும் 30 சதவீத தள்ளுபடி அல்லது ஒரு பட்டுப்புடவை வாங்கினால் ஒரு பட்டுப்புடவை இலவசமாக வழங்குகிறோம் என்றார்.

விழாவில் சிவாயம் சில்க்ஸ் நிர்வாகிகள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img