fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி: 6ம் தேதி துவக்கம்

கோவையில் சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி: 6ம் தேதி துவக்கம்

சைமா சார்பில் 15வது முறை நடத்தப்படும் சைமா டெக்ஸ்ஃபேர் உலக கண்காட்சியை மார்ச் 6 முதல் 9 வரை கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறும் என்று சைமா தலைவர் துரை பழனிசாமி கூறியுள்ளார். இதில் கோவை, மும்பை, அகமதாபாத், பெங்களூரு போன்ற பகுதிகள் போக சுவிட்சர் லாந்து, ஜெர்மனி, இத்தாலி, எகிப்து போன்ற வெளிநாட்டு உற்பத்தியாளர்களும் பங்கேற்று சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களை ஈர்க்க உள்ளனர்.

ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கண்காட்சியை திறந்து வைக்கவுள்ளார். இந்தியா ஜவுளி சம்மேளனத்தின் தலைவர் அஸ்வின் சந்திரன் துவக்க விழாவை தலைமை தாங்கி உரையாற்றவுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இயக்குனர் எஸ்.சுரேஷ் பாபுஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். டெல்லியை சேர்ந்த வசிர் அட்வைசர் நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரசாந்த் அகர்வால் இந்தியா மற்றும் உலக ஜவுளி தொழில் நிலைப்பாடு குறித்து பேச உள்ளனர்.

இந்த கண்காட்சியோடு சேர்த்து சைமா ஏ.ஐ. டெக்ஸ் உச்சிமாநாடு நண்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். சைமா டெக்ஸ்ஃபேர் 2026 கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என சைமா தலைவர் அழைப்புவிடுத்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img