fbpx
Homeபிற செய்திகள்14 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி போதைப்பொருள் விழிப்புணர்வு

14 மணி நேரம் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டி போதைப்பொருள் விழிப்புணர்வு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வைப்பர்க்ஸ் சைக்கிளிங் அகாடமி பயிற்சி பெற்று வரும் இளைஞர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தினார்.

அவர் காலை 6 மணி முதல் இரவு 8 மணிக்கு மேலாக தொடர்ச்சியாக 14 மணி நேரம் இடைவிடாமல் 8 வடிவத்தில் சைக்கிள் ஓட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவர் உணவு கூட உண்ணாமல் சைக்கிள் ஓட்டிய வாறு பழச்சாறு, தண்ணீர், குளுக்கோஸ் போன்றவற்றை மட்டுமே அருந்திக் கொண்டு இந்த சைக்கிள் ஒட்டும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது காண் போரை கவரச் செய்தது. தற்பொழுது இளைஞர் கள் அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர்களுக்கு போதைப்பொருள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வைப் பர்க்ஸ் சைக்கிளிங் அகாட மியின் நிறுவனர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img