fbpx
Homeபிற செய்திகள்கோவை பெதஸ்தா மையத்தில் நாளை‘இயேசு அழைக்கிறார்’ ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் -& டாக்டர் பால் தினகரன்...

கோவை பெதஸ்தா மையத்தில் நாளை‘இயேசு அழைக்கிறார்’ ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் -& டாக்டர் பால் தினகரன் நற்செய்தி

கோவையிலிருந்து சிறு வாணி செல்லும் சாலை யில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகிறது. இதன் சார்பாக சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் நாளை (ஜூலை 11) மதியம் 2 மணிக்கு காருண்யா நகரில் பெதஸ்தா பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரு மான டாக்டர் பால் தினகரன் குடும்பமாக கலந்துக் கொண்டு அருளுரை வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய் கிறார்கள். வாழ்வின் தேவைகளுக்காகவும், நல் வாழ்விற்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் ஏறெ டுக்கப்படும். காருண்யா மாணவ மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம்பெறும்.

இக்கூட்டங்களில் கலந்துக் கொள்வதற்கும், திரும்ப செல்வதற்கும் வசதியாக பாப்பம்பட்டி பிரிவு, லட்சுமி மில்ஸ், கோவில்பாளையம், சரவ ணம்பட்டி, கணபதி, பெரியநாயக்கன் பாளை யம், பொள்ளாச்சி, கிணத்துகடவு, தாராபுரம், பல்லடம், அவினாசி பாளையம், பெருமாநல் லூர், கொடுவாய் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துக்கள் மதியம் 12 மணி முதல் இயக்கப்பட உள்ளன. மற்றும் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல் வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற்கும் பேருந்து வசதிகள் அதிகாலையிலிருந்து இரவு வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் தங்குமிட வசதி செய்து தரப்படும் (தொடர்புக்கு 9487846545 / 9487846640). சிற்றுண்டி அரங்கம், புத்தக அரங்கம் ஆகியவை கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும். காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.

படிக்க வேண்டும்

spot_img