இந்திய தொழில்கள் கூட் டமைப்பு (சிஐஐ) கோவை சார்பில், “டிஜிட்டல் அபா யத்தை வணிக மீள்திறனாக மாற்றுதல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கருத்தரங்கை இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் சஞ்சய் பாஹி தொடங்கி வைத்து பேசுகையில், “ தொடர்ச்சியான கற்றல் உள்ளிட்ட முன்னெச்ச ரிக்கை முயற்சிகள் மூலம் டிஜிட்டல் அச்சுறுத்தல் களை திறம்பட எதிர் கொள்ள முடியும்,” என்றார்.
சிஐஐ கோவை கிளைத் தலைவர் நவ்சாத் பேசு கையில், “தரம், சேவை போலவே, டிஜிட்டல் பாதுகாப்புக்கும் தொழில் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்“ என் றார். கருத்தரங்கில் தலை வர் குணசேகரன், சிஐஐ கோவை துணைத் தலைவர் மகாலிங்கம் ராமசாமி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி துர்கா பிரசாத் துபே உள்ளிட் டோர் பேசினர். இதில் 150க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



