fbpx
Homeபிற செய்திகள்காளப்பநாயக்கன் பாளையம் பள்ளிக்கு ரூ.75 லட்சத்தில் அனன்யா குழுமம் கட்டித்தந்த கட்டிடங்கள் திறப்பு விழா

காளப்பநாயக்கன் பாளையம் பள்ளிக்கு ரூ.75 லட்சத்தில் அனன்யா குழுமம் கட்டித்தந்த கட்டிடங்கள் திறப்பு விழா

கோவை அருகே உள்ள காளப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் நூற்றாண்டு விழா, “அனன்யா செல்டர்ஸ்” சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடம் திறப்பு விழா, பள்ளி கட்டிடங்களை கட்டித் தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தற்போது பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் சுகுணா வரவேற்று பேசினார்.

இதில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் அனன்யா குழுமத்தின் தலைவர் யுவராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் -ராஜேந்திரன், ராஜம்மாள், பேரூர் துணை கண்காணிப்பாளர் செல்லதுரை மற்றும் வடவள்ளி, காவல் ஆய்வாளர் பி.சாரதா, அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img