fbpx
Homeபிற செய்திகள்சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த மாணவ, மாணவிகள்

சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த மாணவ, மாணவிகள்

19 வது மாநில அளவிலான சிலம்பம் (மினி சப் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள்) சேம்பியன் ஷிப் போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எப்எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்ரவரி 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

மினி சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் நேகா ஸ்ரீ குத்து வரிசை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். லீனா தென்றல் கம்பு சண்டையில் தங்க பதக்கம் வென்றார்.

ஆண்கள் பிரிவில் குத்து வரிசை போட்டியில் சச்சின் ஆலிவர் வெள்ளி பதக்கம் வென்றார். ரோகன் கம்பு சண்டையில் தங்க பதக்கம் வென்றார். ஹரி சுந்தர் அலங்கார வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றிபெற்ற வீரர்களை பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண் பாண்டியன் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img