fbpx
Homeபிற செய்திகள்ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம் பாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ஜடையம்பாளையம்புதூர் குறிஞ்சி நகரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய உதவிய £ளர் ஜெயராணி மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் மாரண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சண்முக சுந்தரம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண் டனர்.
ஊராட்சி செயலாளர் நந்தினி தீர்மானங்களை படித்தார்.

தணிக்கை அறிக்கை

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக மற்றும் பொது செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிசாமி தலைமையில் கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முடிவில் போதை பொருள்கள் ஒழிப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img