எஸ்.எஃப்.எல். வேர்ல்டுவைட் சென்னையின் தேனாம்பேட்டையில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் பர்வீன் ஷா கூறுகையில், சென்னையில் புதிய அலுவலகம் தொடங்கியதன் மூலம், சர்வதேச சரக்குப் போக்குவரத்து, வீட்டு உபயோகப் பொருட்கள் அனுப்புதல் மற்றும் வெளிநாடுகளுக்கான இடமாற்றுச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வழங்க முடியும், என்றார்.
சென்னை அலுவலகம் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



