Homeபிற செய்திகள்கோவை நேரு நகர் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கல்

கோவை நேரு நகர் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கல்

நேரு நகர் லயன்ஸ் சங்க மாதாந்திரக் கூட்டத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242 சி மாவட்டத்தின் சிறந்த சேவைகளுக்கான பைவ் ஸ்டார் மற்றும் பார் எக்ஸலன்ஸ் விருதுகளை ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் வழங்கினார். சங்கத் தலைவர் இன்ஜினியர் தேஜஸ்வினிக்கு இரு விருதுகளும், சங்க செயலாளர் அட்மின் எம். செந்தில்குமார், ஆக்டிவ் செயலாளர் கொரியர் நடராஜ், பொருளாளர் உலகநாதன் ஆகியோருக்கு பைவ் ஸ்டார் விருதும் வழங்கப்பட்டது.
மாவட்ட மகளிர் தினத் தலைவர் சுப்பு செந்தில்குமாருக்கு பார் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது. இதில் லயன் லோகநாதன், லயன் நந்தகுமார், மருத்துவர் லயன் சம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img