தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில், கோவை சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா முழுவதும் 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில் சாதித்த மாணவர்கள், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்த்தும் வாய்ப்பையும் பெற்றனர்.
க்ளீ சோஷியல், ஸ்டார்பக்ஸ், குளோபல் பாத்வேஸ் பள்ளிகள் நிகழ்ச்சிகள் மற்றும் ஈரோடு சி.எஸ். அகாடமியின் ‘யூபோனி’ நேரடி இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளது. மேலும், ‘வேக் அப்’, ‘ஃபீலிங் குட்’ ஆகிய இசைப் படைப்புகளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இச்சாதனை கோவை நகருக்கும் சி.எஸ். அகாடமிக்கும் பெருமை சேர்த்துள்ளது.



