கரூர் அடுத்த தாந்தோணி மலை அரசு கலை அறிவியல் கல்லூரியின் கூட்டரங்கில் தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ்” மாணாக்கர்களுக்கு 1,040- மடிக்கணினி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்ச ரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான செந்தில் பாலாஜி மடிக்கணினிகளை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு மாணாக்கர்களிடையே உரையாற்றிய செந்தில் பாலாஜி மாணாக்கர்களின் திறன் அறிவதற்காக கல்வித்துறை தொடர்பான இரண்டு கேள்வி களை எழுப்பினார்.

அதில், மாநிலம் மற்றும் தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணக்கர்களின் சத வீதம் எத்தனை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு மாணவி மாநில அளவில் 47 சதவிகிதம் தேசிய அளவில் 78 சதவிகிதம் என சரியான விடை அளித்தார். அவருக்கு செந்தில் பாலாஜி புத்தகம் பரிசளித்து பாராட்டினார்.
தொடர்ந்து தமிழக பட்ஜெட்டில் நடப்பாண்டு பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்று செந்தில்பாலாஜி கேட்டார். அதற்கு மாணவர்கள் சரியான பதில் சொல்லாததால் செந்தில்பாலாஜியே, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு மொத்தம் 55,261 கோடி ஒதுக்கி உள்ளது எனவும் இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் 46 ஆயிரம் கோடி மாநில அரசு ஒதுக்கி உள்ளது. அதே சமயம் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 78 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது.

இதன் மூலம் தமிழக முதல மைச்சர் பள்ளி கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணாக்கர்கள் கல்வி பயிலும் காலத்தில் தங்களது திறன்களை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



