இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல மருத்து வமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவக் குழுவை கொண்ட இந்த சேவையின் மூலம், மக்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் அடிப்படை நோயறிதல் சேவைகளை பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் பெற்று பயனடைய முடியும்.
தென் சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இந்த மருத்துவப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேவை பெறுவதற்காக நோயாளிகள் பதிவு செய்தல், மருத்துவ ஆலோசனை, நோயறிதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் என அனைத்தும் காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் தடையின்றி மேற்கொள்ளப்படுவது இந்த நடமாடும் மருத்துவப் பிரிவின் சிறப்பம்சம் ஆகும்.
இதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ‘சிம்ஸ் ஹலோ டாக்டர்’ மருத்துவப் பேருந்து தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் பிரத்யேக மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிறப்பு மருத்துவ அமர்வுகளையும் மேற்கொள்ளும். வழிகாட்டலுடன் கூடிய உதவி மருத்துவருடனான சந்திப்பு முன்பதிவுக்கு ஆதரவு மற்றும் சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்ட சுகாதார தகவலுக்கான அணுகலை வழங்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ‘மிஷன் சிம்ஸ் வில்லேஜ்’ திட்டத் தின் கீழ், கிராமங்களைத் தேர்ந்தெ டுத்து, இந்தப் பேருந்து மூலம் தொடர்ச்சியான மருத் துவ சேவைகளை சிம்ஸ் மருத்துவமனை வழங்கவுள்ளது. 044 2001 2001 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் இச்சேவையை பொதுமக்கள் பெற்றுப் பயனடையலாம்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ‘ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ போன்ற முன்னெடுப்புகள் முக் கிய பங்காற்றுகின்றன” என்று கூறினார்.
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பேசுகையில், “மருத்துவமனை யின் சுவர்களுக்கு அப்பால், நோயாளிகள் எங்கு இருக்கிறார் களோ அங்கேயே சென்று தேவைப்படும்
நேரத்தில் அவர்க ளுக்குச் சேவை செய்வதே சிம்ஸ் மருத்துவமனையின் நோக்க மாகும்“ என்றார்.



