fbpx
Homeபிற செய்திகள்10-ம் வகுப்பு பொது தேர்வில் கரூர் மாவட்ட சாதனை மாணாக்கர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி செந்தில் பாலாஜி...

10-ம் வகுப்பு பொது தேர்வில் கரூர் மாவட்ட சாதனை மாணாக்கர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி செந்தில் பாலாஜி வாழ்த்து

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் 23 பேர் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை நேற்று மாலை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன செந்தில் பாலாஜி தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து, ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துக்களையும், ஊக்க தொகையையும் பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணாக்கர்களின் பெற்றோர்களும், தனியார் பள்ளி கல்வி நிறுவனத்தின் தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img