fbpx
Homeபிற செய்திகள்எஸ்டிபிஐ கட்சி 15ம் ஆண்டு துவக்க விழா: நலஉதவிகள் வழங்கி கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சி 15ம் ஆண்டு துவக்க விழா: நலஉதவிகள் வழங்கி கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 15ம்ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கொடி ஏற்றத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்குதல், 200 அனாதை குழந்தைகளுக்கு உணவு வழங்குதல், ஏழை மக்களுக்கு அரிசி ஒரு மாத மளிகை பொருட்கள், பள்ளிகுழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என நல உதவிகள் செய்யப்பட்டது.

மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.அப்துல்காதர் மாவட்ட பொருளாளர் இக்பால், மாவட்ட செயலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பவுர்தீன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அசன் பாதுஷா, மாவட்ட துணைத் தலைவர்கள் சிவக்குமார் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துவக்கதின கொடியேற்று நிகழ்ச்சி

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மத்திய மாவட்டம் எஸ்டிபிஐ – கட்சி வடக்கு தொகுதி சார்பாக 15 வது ஆண்டு துவக்கதின கொடியேற்று நிகழ்ச்சி தொகுதி தலைவர் ஆசிப் தலைமையில் தொகுதி செயலாளர் முபாரக் முன்னிலையில் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹிம் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். வர்த்தகர்அணி மாவட்ட தலைவர் ஹஸன் பாதுஷா சிறப்புரையாற்றினார்.

பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ,வாட்டர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சியை அமைப்பு செயலாளர் அன்சார்தீன் துவங்கி வைத்தார். இறுதியாக தொகுதி துணை செய லாளர் தளபதி பாபு நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் கண்ணப்பன் நகர் கிளை தலைவர் நாகூர்கனி, கிளை செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img