மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் இயங்கி வரும் ஸ்ரீ அம்பாள் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள் ளியின் செயலாளர் கீதா பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தலைமை வழிகாட்டி சசிகுமார் சாம்ராஜ் வழிகாட்டுதலின்படி முதல்வர் சித்ரா ஜெயந்தி தலைமையில் பள்ளி வளாக மைதானத்தில் கடவுள் வாழ்த்து பாடல் மற்றும் வரவேற்புரையுடன் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக என்.ராமலிங்கம், அன்னபூர்ணா ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்வதின் முக்கியத்துவத்துவம், மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருக உண்ண வேண்டிய உணவுகள் பற்றியும் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பற்றியும் எடுத்து ரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 450-க்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு 15க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்தனர்.