fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் மாணவர்களுக்கு உதவ அறிவியல் ரதம் துவக்கம்

நாமக்கல்லில் மாணவர்களுக்கு உதவ அறிவியல் ரதம் துவக்கம்

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அறிவியல் ரதம் தொடக்க விழா நடைபெற்றது. பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். துணை முதல்வர் அமீருன் னிசா வரவேற்றார். தொ டர்ந்து அறிவியல் ரதம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரதம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள 40 நடுநி லைப்பள்ளிகளுக்கு செல்ல உள்ளது. மாணவர்களு க்கு அறிவியல் மனப்பான் மையை வளர்க் கும் வகையில் இந்த ரதம் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் இரு பள்ளிகளுக்கு இந்த ரதம் செல்ல உள்ளது.

ரதத்தில் சென்னை ஐஐடியை சேர்ந்த இருவர் செல்கின்றனர். அவர்கள் எளிய முறையில் அறிவியல் பரிசோதனைகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்து விளக்கப்படுத் துவர்.
தொடர்ந்து அறிவியல் ரதம் பள்ளிகளுக்கு செல்வதற்கு ரோட்டரி மாவட்டக் கல்விக்குழு அமைப்பினருடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் கை யெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வெங்கடேஸ்வர குப்தா, சிவக்குமார், கருணாகர பன்னீர்செல்வம், ஹரி நிவாஸ், செந்தில்குமார், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி “அபி” பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img