fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அறிவியல் கண்காட்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் சமூக அறிவியல் கணிதம் விஞ்ஞானம் மற்றும் இயற்கை உணவு சார்ந்த விவசாய பலன்கள் போன்ற திட்டங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் இருந்து 15 திட்டங்களை ரோட்டரி சங்கத்தினர் பரிசுக்கு உரியனவற்றை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவர் கனகவேல் பரிசளித்தார்.
ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சக்திவேல் மற்றும் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய கண்காட்சி மதியம் 12 மணி அளவில் நிறைவுற்றது. உணவு இடைவேளைக்கு பிறகு கண்காட்சி பிற பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு திட்டங்களை பார்வையிடும் வசதி செய்து தரப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img