நேபாள நாட்டில் ரணக்சலா மைதானத்தில் பள்ளி விளையாட்டுகள் மற்றும் செயல்பாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் கோவை குனியமுத்தூர் மற்றும் சுந்தராபுரம் தலைமையிடமாக கொண்ட கராத்தே விஜூ தற்காப்பு கலைக்கூடத்தில் பயிலும் 17 மாணவ மாணவிகள் பங்கேற்று அனைவரும் தங்கப்பதக்கம் பெற்றனர். உடன் ஆசிரியர்கள் டாக்டர் எம்.விஜூ, வி.மகாலட்சுமி, இ.காளியப்பன் உள்பட பலர் உள்ளனர்.



