fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நவீன கூடைப்பந்து மதிப்பெண் பலகை அறிமுகம்

கோவையில் நவீன கூடைப்பந்து மதிப்பெண் பலகை அறிமுகம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்ப நிறுவனம், தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த கூடைப்பந்து ஸ்கோர் போர்டு அமைப்பான ‘POINTIO’-ஐ. அறிமுகப் படுத்தியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப நிறுவனத்தின் புத்தாக்க மையமான ‘HIVE’ மூலம், தொழில் துறை கூட்டாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட POINTIQ நிகழ்நேரப் பகுப்பாய்வுத் தரவுகளை வழங்குவதோடு, பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.

இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் டேவிட் ரத்னராஜ் மற்றும் முன்னாள் மாணவர் வி.தீபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் திறமை யையும் தொழில் துறை கூட்டாண்மைகளையும் துணையாகக் கொண்டு, தங்கள் ஆராய்ச்சிகளை எவ்வாறு சந்தைக்கு ஏற்ற நடைமுறைத் தீர்வுகளாக மாற்ற முடியும் என்பதை இந்த நிகழ்வு பறைசாற்றுவதாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img