பிரசித்தி பெற்ற உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி, 10 பரிசுகளை பெற்று பாராட் டுகளை குவித்துள்ளது.
ரோஜா கண்காட்சி நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி முதன்மை அலுவலர் பசுவண்ணா, பேராசிரியர்கள் சண்முகம், பிரியங்கா, பிரியதர்ஷினி, கல்லூரி அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பரிசுக் கோப்பைகளை பெற்றுக் கொண்டனர்.மேலும், பேராசிரியர்கள் சண்முகம், பிரியங்கா, பிரியதர்ஷினி உள்ளிட்டோர் மிகச் சிறப் பான ஏற்பாடுகளை செய்து, இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு பிரிவுகளில் ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி பெற்ற வெற்றிகள் வருமாறு: தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக்கள் – ஹைபிரிட்டீஸ் போட்டியில் முதல் பரிசையும் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக்கள்- ஃப்ளோரி பண்டாஸ் போட்டியில் இரண்டாம் பரிசையும் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக்கள்- ஸ்டாண்டர்ட்ஸ் போட்டியில் மூன்றாம் பரிசையும் இக்கல்லூரி வென்றுள்ளது.
அதேபோல இகேபானா முறையில் ரோஜா அலங்காரப் போட்டி, ரோஜா ரங்கோலி போட்டி, ரோஜா தயாரிப்புகள் – குல்கந்த், ரோஜா எண்ணெய் போட்டிகள் ஆகியவற்றில் ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி முதலிடத்தையும் ரோஜா அலங்காரம் – பல்வேறு பாத்திரங்களில் அலங்காரம், ரோஜா மலர் பூங்கொத்துகள், ரோஜா மாலை அலங்காரம் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இக்கல்லூரியை இச்சாதனைக்காக பலரும் பாராட்டு தெரிவித்தபடி உள்ளனர்.



