தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில், ‘போதை இல்லா தர்மபுரி, போதை இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறுதிமொழி, கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன.
நிகழ்ச்சியை இணை இயக்குநர் டாக்டர் பாரதி தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நியமன அலுவலர் லோகமணி, டாக் டர் வினோத் ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாண வர்கள் பங்கேற்று போதைக்கு எதிரான கருத்துகளை வலி யுறுத்தினர்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் பாரதி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.



