கோவை சங்கரா கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் தென்னரசு, குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன் னாள் மாணவர்கள் தங்க ளது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் சந்திப்பின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேலும் தாங்கள் படித்த காலத் தில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். அத்துடன் தங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் களை வரவழைத்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித் தனர்.
இதில் துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வீரப்பன், ஞானவேல், சுரேஷ், செல்வகுமார், சுந்தர பாண்டியன், தமிழ்செல்வன், சுரேஷ்குமார் உள்பட பலர் செய்திருந்தனர்.



