fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 3,853 மாணவர்களுக்காக ரூ.2.26 கோடியில் 8 ஒருங்கிணைந்த சமையல்...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 3,853 மாணவர்களுக்காக ரூ.2.26 கோடியில் 8 ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டுமானப் பணி- கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

கோவை மாவட்டம் கூடலூர், காரமடை, கருமத்தம் பட்டி, பொள்ளாச்சி, வால் பாறை நகராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 94 பள்ளிகளைச் சேர்ந்த 3,853 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக ரூ.2.26 கோடியில் 8 ஒருங்கி ணைந்த சமையல் கூடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரமடை, கூடலூர் நகராட்சிப் பகுதிகளில் முதல மைச்சர் காலை உணவுத் திட் டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையலறை கூடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.

பள்ளிக் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியை உறுதி செய்ய, முதல்வர் 15–09-2022 அன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 121 பள்ளிகளில் பயிலும் 15,216 மாணவ, மாணவிகளும், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 11 பள்ளிகளில் பயிலும் 1503 மாணவ, மாணவிகளும், மதுக்கரை நகராட்சி பகுதிகள் உள்ள 4 பள்ளிகளில் பயிலும் 952 மாணவ, மாணவிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் 17671 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கூடலூர் நகராட்சியில், 10 பள்ளிகளுக்கு தெக்குப்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல்கூடமும், காரமடை நகராட்சியில் 7 பள்ளிகளுக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் ஒருங்கி ணைந்த சமையல்கூடமும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 6 பள்ளிகளுக்கு நகராட்சி திருமண மண்டபத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல்கூடமும், பொள்ளாச்சி நகராட்சியில் 12 பள்ளிகளுக்கு கோட்டூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.27 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல் கூடமும், வால்பாறை நகராட்சியில் 59 பள்ளி களுக்கு நீர்வீழ்ச்சி அரசு உயர் நிலைப்பள்ளி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோலையார் அணை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு இடங் களில் தலை ரூ.36 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சேர்ந்த 3,853 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக ரூ.2.26 கோடியில் 8 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காரமடை நகராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், கூடலூர் நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமையலறை கூடங்களை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.44.50 லட்சம் மதிப்பில் சித்ரா நகர் மெயின் ரோடு விரிவாக்கப்பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52.70 லட்சம் மதிப்பில் ராமசாமி நகரில் 1 மற்றும் 3-ம் வீதி தார் சாலை அமைக்கும் பணி, பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதியின் கீழ் கஸ்தூரிபாளையம் சாலையில் ஐயப்பன் கோவில் முதல் எம்ஜிஆர் நகர் வரை ரூ.49 லட்சம் மதிப்பில் கலவை ஜல்லி தளம் அமைக்கும் பணி, வீரபாண்டி பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.18.60 லட்சம் மதிப்பில் கஸ்தூரி கார்டன் பேவர்பிளாக் அமைக்கும் பணி, நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் வார்டு எண் 7-ல் கோகுலம் காலனி முதல் வீரபாண்டி பஞ்சாயத்து எல்லை வரை ரூ.1.20 கோடியில் தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி யர் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் பத்மாவதி, செயல் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img