சத்தியமங்கலம் நாடார் பேரவை ஆலோ சனைக் கூட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் நடை பெற்றது இந்த கூட்டத்திற்கு சத்தியமங்கலம் நாடார் பேரவை தலைவர் கேசவன் தலைமையில், துணை செயலாளர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா குறித்து சந்தை கடையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி 500 பேருக்கு அன்னதானம் வழங்குதல், மேலும் சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு ,புத்தகம், பேனா ,பென்சில் வழங்குதல் என நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நாடார் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இறுதியில் நாடார் பேரவை பொருளாளர் இசக்கிதுரை நன்றி கூறினார்.