fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: ரூ.2.07 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

நீலகிரி: ரூ.2.07 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூராட்சிகள் துறை) சார்பில் ரூ.2.07 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம் கேத்தி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வளம் மீட்பு பூங்காவில், 2022-2023 நிதி ஆண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கெரடா – கெங்குந்தா சாலை யினையும், சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.50 லட்சம் மதிப்பில் நேர்கம்பை மயானத்தில் கட்டி முடிக்கப்பட்ட நடைபாதையுடன் கூடிய கல்வெட்டினையும், தோடா காலனியில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதையினையும், முக்கட்டியில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலையினையும்,சோலூர் முதல் நிலை பேரூராட்சி பகுதியில் 2022-2023 நிதி ஆண்டில் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடையினையும், தூய்மை இந்தியா திட்டம் 2.0 ன் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பில் நாகார்தனையில் கட்டப்பட்டுள்ள 10 இருக்கைகள் கொண்ட கழிப்பறையினையும், பிக்கண்டியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.38.80 லட்சம் மதிப்பில்; மேம்படுத்தப்பட்ட சாலை, வடிகால், தடுப்புச் சுவரினையும், கோக்கால் பகுதியில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில்; கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையினையும், தொட் லிங்கியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் ரூ.2.07 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று (ஜூலை 10) திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்த தாவது: ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000/- வரும் 15.09.2023 முதல் வழங்கப்பட உள்ளது.

முதல்வர், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் ஏதொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறு த்தியதை தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

மழை தொடங்குவற்கு முன்பாகவே கூடலூர், உதகை பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்ட கார ணத்தினால், இப்பகுதியில் இந்த மழையினால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 12,000 மணல் மூட்டைகளும், தீயணைப்புத்துறை மூலம் பவர்ஷா கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தென்மேற்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேத்தி தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட சாலை, நடைபாதை உள்ளிட்ட பணிகளும், சோலூர் முதல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்திய திட்டம் 2.0, தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, பொதுக்கழிப்பிடம், நீர் தேக்க தொட்டி, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கேத்தி பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில்; 2021-&2022 நிதி ஆண்டில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 1 பணி ரூ.50 லட்சம் மதிப்பிலும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 பணி ரூ.56.30 லட்சம் மதிப்பிலும், இயக்கம் பராமரிப்பு இடைவெளி நிரப்பு நிதி திட்டத்தின் கீழ் 4 பணிகள் ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பணிகள் ரூ.18 லட்சம் மதிப்பிலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பணிகள் ரூ.70.20 லட்சம் மதிப்பிலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 1 பணி ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 12 பணிகள்ரூ.225.80 லட்சம் மதிப்பிலும், 2022-&2023-ம் நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2 பணிகள் ரூ.49.80 லட்சம் மதிப்பிலும், தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் 3 பணிகள் ரூ.88.50 லட்சம் மதிப்பிலும், 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் TIED GRAND 9 பணிகள் ரூ.47.40 லட்சம் மதிப்பிலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் UNTIED GRAND பணிகள் ரூ.31.58 லட்சம் மதிப்பிலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 பணிகள் ரூ.164.30 லட்சம் மதிப்பிலும், SUIDFதிட்டத்தின் கீழ் 1 பணி ரூ.36.21 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1 பணி ரூ.34.40 லட்சம் மதிப்பிலும், பொது நிதி திட்டத்தின் கீழ் 1 பணி ரூ.7.60 லட்சம் மதிப்பிலும், இயக்கம் பராமரிப்பு இடைவெளி நிரப்ப நிதி திட்டத்தின் கீழ் 14 பணிகள் ரூ.110.40 லட்சம் மதிப்பில் மொத்தம் 47 பணிகள் ரூ.570.19 லட்சம் மதிப்பிலும் என இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 59 பணிகள் ரூ.8 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரகாசபுரத்தில் வளம்மீட்பு பூங்காவில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் விண்ட்ரோ பேட் மற்றும் கூரை ரூ.57 லட்சம் மதிப்பிலும், வளம் மீட்பு பூங்காவிற்கு கூரை ரூ.19.50 லட்சம் மதிப்பிலும், தடுப்புச்சுவர் ரூ.8 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.77.50 லட்சம் செலவிடப்பட்டு இப்பகுதியில் பணிகள் சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரகாசபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் செயல்பாடுகளும், மக்கும் குப்பை, மக்காத குப்பை வகைகள், உரம் தயாரிக்கும் இயந்திரம், மண்புழு உரம் தயாரித்தல், குப்பையிலிருந்து பிரித்து எடுத்த பொருட்கள் என குப்பையை தரம் பிரித்து அதன் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கினை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பைகளை வழங்கினார்.

நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார் (குன்னூர்), துரைசாமி (உதகை), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, பேரூர £ட்சி தலைவர்கள் பி.கௌரி (சோலூர்), ஹேமமாலினி (கேத்தி), துணைத்தலைவர்கள் விக்டர் (கேத்தி), பிரகாஷ்குமார் (சோலூர்), உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஹர்ஷத் (சோலூர்), நடராஜன் (கேத்தி), இளநிலை பொறியாளர் வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img