கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், தொண்டாமுத்தூர் சாலை, வேடப்பட்டி பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள கழிவுநீர் நிலையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கூட்டாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி, பத்மாவதி, பேரூராட்சி உதவி இயக்குநர் துரைபாலசிங், உதவி செயற்பொறியாளா ராஜா, வேடப்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயபாலன், செயல்அலுவலர் சுதா, முன்னாள் வடவள்ளி பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம், உதவி ஆணையர் சேகர், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் பொறியாளர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.