சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண் மை கல்லூரியில் 2024 ஆண்டுக்கான பட்டதா ரிகள் தினம் நவம்பர் 12 அன்று கொண்டாடப்பட் டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் அல்லி ராணி தலைமை தாங்கினார். ஜவுளி மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் நாகராஜன், ராம்ராஜ் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் UIT கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு தலைமையேற்று அல்லி ராணி பேசியதாவது: பட்டதாரிகள் SVPISTM இல் கற்றுக்கொண்ட முக்கிய மதிப்புகளை ஒருபோதும் மறக்கக் கூடாது. எதிர்கால முயற்சிகளில் நிறுவனத்தின் நோக்கமான சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எப்போதும் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தலைமை விருந்தினர் நாகராஜன் தன்னம்பிக்கை, கவனம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார். Er.சண்முகம் 2047ம் ஆண்டுக்குள் நாடு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார்.