இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ராணுவ மற்றும் குடிமக்கள் பயன்பாடுகளுக்கான மின்னணு உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை தகுதிப்படுத்துவதற்காக மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சமீர் – மின்காந்தவியல் மையத்தில் நிறுவப்பட்டுள்ள முழு தானியங்கி அதிநவீன, மின்காந்த குறுக்கீடு மற்றும் இணக்கத்தன்மை (EMI/EMC) ஆய்வகங்களை திறந்து வைத்தார்.
தேசிய கணக்கெடுப் பின்படி, மின்காந்த குறுக்கீடு மற்றும் இணக்க த்தன்மை சோதனை களுக்கான மொத்த இந்திய சந்தையின் மதிப்பு தோராயமாக ரூ.640 முதல் 660 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2030-ம் ஆண்டுக்குள் 1,000 – 1,200 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் “ஆத்மநிர்பர் பாரத்” முன்முயற்சிகளைப் பின்பற்றி, சமீரின் சென்னை மின்காந்தவியல் மையம், மின்காந்த குறுக்கீடு மற்றும் இணக்கத்திற்கான அதிநவீன, ராணுவ தரநிலைகள் சோதனைக் கூடங்களை நிறுவியுள்ளது. இந்தத் திட்டமானது இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிதியளிக் கப்படுகிறது.
சமீர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் பி.ஹனுமந்த ராவ் கூறுகையில், “மேம்பட்ட மின்காந்த குறுக்கீடு ஆய்வகத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக செயல்படு த்தவும், சமீர் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வக பயணத்தில் இது ஒரு மைல்கல் சாதனையாகும்.
வாகனம், ராணுவம், சப்ளை மேனேஜ்மென்ட், ஏவியோனிக்ஸ் போன்ற பல்வேறு வகைப் பொருட்களைத் தயாரிக்கும் பல அரசுத் தொழில்கள் நிறுவனங்கள், ஆய்வகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்டப் தொழில்கள், சிறிய அளவிலான தொழில்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு சமீர் தனது சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் (லினாக்) அமைப்பையும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார்.
பிரதமரின் தொ லைநோக்குப் பார்வையின் கீழ், புற்றுநோய் சிகிச்¬ சயை மலிவு விலை யில் வழங்கு வதற்காக சமீர் நிறுவனத்தால் வடிவமை க்கப்பட்ட இந்த லினாக் அமைப்பிற்கு இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியளித்துள்ளது. இத்தயாரிப்பு இதுவரை பல்வேறு மருத்துவ மனைகளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை தீர்வுகளை வழங்கியுள்ளது.
சித்தார்த், 6MVஷி மெடிக்கல் லினாக் என்பது ஒரு மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் ஆகும். இது 6MV ஆற்றலுடன் ஊடுருவு கதிர்களை வழங்கும் சக்தியுடையது. இதனால், இயந்திரத்தில் இருந்து கதிரியக்கக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
உருவாக்கப்பட்ட எக்ஸ்-ரே, சிகிச்சை திட்டமிடல் முறையைப் பயன்படுத்தி புற்றுநோய் கட்டியின் மீது துல்லியமாக கட்டுப் படுத்தப்பட்ட முறையில் கதிர்வீச்சு செய்யப் படுகிறது. கதிரியக்க சிகிச்சை தேவைப்படும் 70%க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இந்த இயந்திரத்தைப் பயன் படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்.



