டெக்சார்க் அமைப்புடன் இணைந்து விவோ இந்தியா நிறுவனம், தனது இந்தியாவின் தாக்க அறிக்கை 2022-ன் 2வது பதிப்பில் ‘ஸ்மார்ட்போனின் பொருளாதார மதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது.
இந்தியாவில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர் செலவழிக்கும் 1 ரூபாய்க்கு 6.1 மடங்கு பலன் பெறுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஸ்மார்ட்போன் விலை மற்றும் சேவை கட்டணத்தின் மூலம் கிடைத்த பலன்களுடன் மொத்த உரிமைச் செலவையும் ஒப்பிட்டு பொருளாதார மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரை விட இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் 50 சதவீதம் கூடுதல் பலன் பெறுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
விவோ இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் ஆலோசனைப் பிரிவு தலைவர் கீதாஜ் சன்னானா கூறியதாவது:
இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஊக்க சக்தியாக மாறியுள்ளது.
ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கு அப்பால், நமக்கான வாடகை கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்தே முன் பதிவு செய்வது முதல் மளிகை பொருட்கள், நிதிகளை நிர்வகித்தல், அதற்கு அப்பால் தொழில்சார் அல்லது தனிப்பட்ட பயன்பாடுகள் வரையிலான அதன் பன்முக செயல்பாடுகளின் காரணமாக ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் காரணமாக அனைத்திலும் பயனர்கள் மிகுந்த பயன் அடைந்து வருவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருவதைக் காட்டுகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.