சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் நலனுக் கென பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல் படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசின் திட்டங் கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களால் தொடர் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்தியா நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 1 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 1 மாவட்ட தலைமை மருத்துவமனை, 9 வட்டார மருத்துவமனைகள் மற்றும் 2 வட்டாரம் அல்லாத மருத்துவமனைகள் என மொத்தம் 13 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
23 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 64 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
17 நிலையங்கள்
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகள், 7 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் என மொத்தம் 17 நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தேசிய தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளன.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந் துகள், விஷ முறிவு மருந்துகள் உள்ளிட்ட அத்யாவசிய மருந்து பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்திடவும், வருகை தரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்திடவும் ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.
கொளத்தூர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 26 பள்ளி மாணவர் விடுதிகளில் 1062 மாணவர்களும், 10 பள்ளி மாணவியர் விடுதிகளில் 438 மாணவிகளும், 3 கல்லூரி மாணவர் விடுதிகளில் 316 மாணவர்களும், 3 கல்லூரி மாணவியர் விடுதிகளில் 322 மாணவிகளும் என மொத்தம் 42 விடுதிகளில் 2138 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முட்டை, அசைவ உணவுகள், காய்கறிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சத்தான உணவு வகைகள் மூன்று வேளையும் வழங்கப்பட்டு வருகின் றன.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்களும், சோப்பு, எண்ணெய், போர்வை, சீருடைகள் உள்ளிட்ட அனைத்து அத்யாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அன்றாடம் நடை பெறும் உலக நடப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள் ளும் வகையில் நாள்தோறும் நாளிதழ் களும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் பொது மக்களின் நலனுக்கென செயல் படுத்தப்படும் திட்டங்களை முறையாக கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.தணிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.