இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூல் எட்டெக் யுனிகார்ன் நிறுவனம் ஆன ‘லீட்’ (LEAD), தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை கொண்டு வந்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
LEAD-ன் NEP அடிப்படையிலான இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டமானது, அதன் சர்வதேச தரத்திலான பாடத்திட்டம், மல்டி-மாடல் கற்பித்தல்-கற்றல் முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் பாடங்களை ஆழமாக புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெறுவதை உறுதி செய்கின்றன.
தற்போது, LEAD-ன் இன்டகிரேட்டட் ஸ்கூல் எட்டெக் சிஸ்டம், தமிழகம் முழுவதும் 400 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 1,60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 3800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் LEAD மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரு மற்றும் முக்கிய நகரங்களில் கிடைக்கும் அளவிற்கு தரமான கல்வி, 2ம் நிலை நகரங்களில் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை போக்க, 2ம் நிலை நகரங்களில் உள்ள பள்ளிகளில் LEAD நவீன மாற்றங்களை கொண்டு வருகிறது.
உயர்தர கல்வி
‘லீட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமீத் மேத்தா கூறியதாவது: ‘இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் தினமும் 6 – 7 மணி நேரம் பள்ளியில் செலவிடுகின்றன. இருப்பினும், பெருநகரங்களில் அதிக கட்டணம் கொண்ட பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே, சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட, உயர்தர கல்வி கிடைக்கிறது.
இந்த நிலையை மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதற்காக LEAD-ன் இன்டகிரேட்டட் ஸ்கூல் எட்டெக் சிஸ்டம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஆதரவு அளித்து அதிகாரம் தந்து வருகிறோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 பள்ளிகள் மற்றும் 2.5 கோடி மாணவர்களுக்கு பயன் அளிக்க வேண்டுமென்ற இலக்கின் ஒரு பகுதியாக தமிழகத்தில் எங்கள் இருப்பை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் குழும பள்ளிகளின் செயலாளர் அங்கயற்கண்ணி, ஈரோடு லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் இறையன்பு உள்ளிட்டோர் கருத்துகளை பகிர்ந்தனர்.