fbpx
Homeபிற செய்திகள்சேலம் தி ஐ பவுண்டேஷனில் விழிப்புணர்வு மனித சங்கிலி

சேலம் தி ஐ பவுண்டேஷனில் விழிப்புணர்வு மனித சங்கிலி

சேலம் தி ஐ பவுண் டேஷன் மருத்துவமனை, செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரி மாண விகள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி அமைத்தனர்.

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஐ பவுண்டேஷன் தலைமை மருத்துவர் அஸ்வின் ஷெஹி ஆகியோர் துவக்கி வைத்தனர். மருத்துவர் அஸ்வின் ஷெஹி கூறியதாவது: 2013-ம் ஆண்டில், உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 643 மில் லியனாக மதிப்பிடப்பட்டது.

இது 2020-ம் ஆண் டில் 80.0 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2040ல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள் ளது. இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள்.

இலவச கண் பரிசோதனை

40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இந் நோயால் 12.8 சதவீதம் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட 90% மேற்பட்டோருக்கு, இந் நோய் பற்றி தெரிவதில்லை.

சேலம் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என்றார். தி ஐ பவுண்டேஷன் விழித்திரை மருத்துவர் சுரேஷ்பாபு, மருத்துவர்கள் ராஜஸ்ரீ , ஆண்ட்ரியோ ஜோஸ் மேனேஜர் செந்தில், மார்க்கெட்டிங் கோவிந்தசாமி, செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரி முதல்வர் பிரே மலதா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img